சுமார் 1.6 கோடி பேர் 16 வாரங்களுக்குப் பிறகும் 2 ஆம் டோசை போடவில்லை என தகவல்

0 1559
சுமார் 1.6 கோடி பேர் 16 வாரங்களுக்குப் பிறகும் 2 ஆம் டோசை போடவில்லை என தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் இடைவெளி காலமான 16 வாரங்கள் கடந்த பின்னரும் இது வரை இரண்டாவது டோசை போட்டுக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வயதானவர்கள் என்றும் எஞ்சியவர்கள் 45 வயதிற்கும் மேலான சுகாதார, முன்களப்பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னுரிமைப் பிரிவினரான சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள், 45 முதல் 59 வயது உடையோர் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 12 கோடியே 80 லட்சம் பேர் மே இரண்டாம் தேதி நிலவரப்படி முதல் டோசை போட்டுக்கொண்டதில், 11 கோடியே 20 லட்சம் பேர் தங்களது இரண்டாம் டோசையும் போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments