வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகைக்கடையில் மர்மநபர்கள் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டதில் வாடிக்கையாளர் ஒருவர் பலி

0 2799

கர்நாடக மாநிலம் மைசூருவில் நகைக்கடையில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்ட போது வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

வித்யாரண்யபுரம் பகுதியில் உள்ள அம்ருத் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் 3 பேர், துப்பாக்கி முனையில் கடையில் இருந்த நகைகளை ஒரு பையில் எடுத்த போட்டபோது, திருடன், திருடன் என கத்திக் கொண்டே கொள்ளையர்களை தடுக்க உரிமையாளர் தர்மேந்திரா முயன்றுள்ளார்.

அப்போது மர்மநபர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் தர்மேந்திராவை நோக்கி சுட்ட போது, அவர் தரையில் படுத்துக் கொண்டதால், அந்த சமயத்தில் பாதியளவு மூடப்பட்ட ஷட்டரை திறந்து நகைக்கடைக்குள் வந்த  இளைஞர் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தப்பி ஓடிய கொள்ளையர்கள்,  சத்தம் கேட்டு கடையின் முன்பு குவிந்த மக்களிடமும் துப்பாக்கி காட்டி மிரட்டியபடி பைக்கில் தப்பி சென்றுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments