மரத்தில் சிக்கித் தவித்த கரடி... மரத்தையே சாய்த்து மீட்ட வனத்துறையினர்..!

0 1968

வால்பாறை அருகே மரத்தில் சிக்கிய கரடியை வனத்துறையினர் மீட்டனர்.

வாட்டர்பால்ஸ் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு கரடிகளில் ஒன்று சவுக்கு மரத்தில் ஏறியபின் இறங்கமுடியாமல் சிக்கிக்கொண்டது. தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மரத்தை அடியோடு வெட்டி கீழே சாய்த்தனர். அப்போதும் கரடி வெளியே வரமுடியாமல் தவித்ததால் மயக்க ஊசி போட்டு மீட்கப்பட்டது.

அப்பகுதியில் கரடி தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வனவிலங்குகள் மூலம் உயிரிழப்புகளைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments