மண்ணும் பாறைகளுமாக மளமளவென ஏற்பட்ட நிலச்சரிவு... வாகனங்களை விட்டுவிட்டு உயிரைக்காக்க ஓடிய பயணிகள்

0 2177

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவுகளால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்வாலா எனுமிடத்தில் மலைக்குன்று ஒன்று மண்ணும் பாறைகளுமாக மளமளவென சரிந்து விழுந்தது.

சரியும் பாறைகளைக் கண்டு கார்கள் பின்வாங்கி விரைந்தன. பலர் வாகனங்களை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்.தனக்புர்-சம்பாவத் பகுதியில் பாறைகள் உருண்டு சாலை தேசிய நெடுஞ்சாலையின் ஒருபகுதி மூடப்பட்டது.

பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. சாலைகளில் இருக்கும் பாறைகள் அப்புறப்படுத்தப்படும் வரை போக்குவரத்து நிறுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments