வாரிசு சான்றிதழ் தருவதற்கு ரூ.2ஆயிரம் லஞ்சம்... சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஏஓ வீடியோ.!

0 3374

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வாரிசு சான்றிதழ் தருவதற்கு 2ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலர் வீடியோ வெளியாகி உள்ளது.

நவமால் காப்பேர் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட காயத்ரி நகரைச் சேர்ந்தவர் சர்புதீன். இவர், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக, கிராம நிர்வாக அலுவலர் சப்ராபீபியை நாடியுள்ளார். அதற்கு 2ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்கும் என்று விஏஓ கூறியுள்ளார்.

முதலில் 500ரூபாய் லஞ்சம் கொடுத்த சர்புதீன் 2ஆம் கட்டமாக 1500ரூபாய் கொடுத்த போது அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments