ஆகஸ்ட் 31க்குப் பிறகு அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது - தாலிபன்கள்

0 4596

கடந்த 24 மணி நேரத்தில் காபூல் விமானநிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட விமானங்களில் சுமார் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31க்குப் பிறகு அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என்று தாலிபன்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.இதனையடுத்து இரவு பகலாக அமெரிக்கா ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றி வருகிறது. அமெரிக்க விமானங்கள் 10 ஆயிரத்து 400 பேர்களையும் அதன் 61 நட்பு நாட்டு விமானங்கள் மூலம் 5 ஆயிரத்து 900 பேர்களும் காபூலை விட்டு வெளியேறினர்.

மேலும் பல ஆயிரம் பேர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் அமெரிக்க விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. 31 ஆம் தேதிக்குள் அனைவரையும் வெளியேற்றிவிடுவோம் என்று ஜோ பைடன் அரசு தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments