காதல் வண்டான கணவனால் தீக்குளித்த காதல் மனைவி..! ஒன்றை விரட்டிய ரெண்டு

0 2914
காதல் வண்டான கணவனால் தீக்குளித்த காதல் மனைவி..! ஒன்றை விரட்டிய ரெண்டு

அம்பத்தூர் அருகே அழகு நிலையம் நடத்தி பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் தனது காதல் கணவர் மற்றும் காதலி மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர் புதூரைச் சேர்ந்தவர் அஜய்சத்யா. இவர் டோனி அண்ட் காய் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு வேலைபார்த்த கவிதாவை காதல்வலையில் வீழ்த்திய அஜய், அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

இந்த நிலையில் அஜய்யின் ஆசைவார்த்தையில் மயங்கிய கவிதா, தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி அஜய்யை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

திருமணத்துக்கு பின்னர் அஜய்யின் நடவடிக்கை மாறத் தொடங்கி, அங்குவரும் பெண்களுடன் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற கவிதாவை அவரது வீட்டில் உள்ளோர் ஏற்காததால், தனியாக வீடு எடுத்து வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், அழகு நிலையத்துக்கு வேலைக்கு வந்த, ஒரு குழந்தைக்குத் தாயான சிந்து என்பவருடன் காதல் கொண்ட அஜய், அவருடன் ஒரே வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து தனது கணவனின் செயலை அவரது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக, தனது கணவனும், குழந்தையுடன் சிந்துவும் இருக்கும் படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக பதிவிட்டுள்ளார் கவிதா. இதையடுத்து கவிதாவை தொடர்பு கொண்ட அஜய்யின் இரண்டாவது காதலி சிந்து மிரட்டியதாக கூறப்படுகின்றது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

கணவன் அஜய்யின் தூண்டுதலின் பேரில் சிந்து, கூலிப்படையைச் சேர்ந்த பெண் ஒருவரை வைத்து ஆபாசமாகவும் அருவெறுக்கதக்க வகையிலும் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில் காவல் நிலையங்களில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அஜய் மற்றும் சிந்து மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆவடியில் உள்ள துணை ஆணையர் அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி கவிதா தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் விரைந்துவந்து அவரைக் காப்பாற்றினர்.

கவிதாவிடம் குறையை கேட்டறிந்த காவல்துணை ஆணையர் மகேஷ், அவரது புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதை அடுத்து, அஜய் மீதும் சிந்து மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.

அதே நேரத்தில் வேலைக்கு சென்ற இடத்தில் அஜய்யின் ஆசை வார்த்தையை நம்பி காதலில் விழுந்ததோடு, அவரைத் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஆதரவை இழந்து கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வீதியில் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கவிதா என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments