ஆரம்ப சுகாதார நிலையத்தில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய செவிலியர்..!

0 2932

தெலுங்கானா மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடிய செவிலியரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

ராஜண்ண சிறிசில்லா மாவட்டத்தில் உள்ள தங்கலைப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தின்போது செவிலியர் ஒருவர் நடனமாடினார். தெலுங்கில் பிரபலமடைந்த புல்லட் வண்டியில் வருகிறான் புட்டு புட்டு என்ற சத்தத்துடன் என்கிற பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த மாவட்ட மருத்துவ அதிகாரி செவிலியருக்கு மெமோ வழங்கினார். இதற்கு செவிலியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments