பாராலிம்பிக் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்

0 2097

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று தொடங்குகின்றன. தொடக்க விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தேசியக் கொடியேந்தி வரவுள்ளார். 

நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும், மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி,16-வது பாராலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று தொடங்கி வருகிற 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 163 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

539 பிரிவுகளுடன் கூடிய 22 விளையாட்டுகளில் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பேட்மிண்டன், டேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகள் பாராலிம்பிக்கில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 54 பேர் கலந்து கொள்ள உள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், நீச்சல், பளுதூக்குதல் உள்ளிட்ட 9 விளையாட்டுகளில் இந்திய வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பேட்மிண்டன் போட்டியின் 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் பலக் கோலி ((Palak Kohli)) பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016 ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கம்வென்ற தமிழக வீரர் மாரியப்பன், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜாஜரியா ((Devendra Jhajharia)) ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டி போல பாராலிம்பிக்கிலும் கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில்,
ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில் 5 வீரர்கள் உள்பட 11 பேர் மட்டுமே தொடக்க விழாவில் பங்கேற்பார்கள்.

அணிவகுப்பின் போது தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவரை தவிர வட்டு எறிதல் வீரர் வினோத்குமார், ஈட்டி எறிதல் வீரர் தேக்சந்த், வலுதூக்கும் வீரர் ஜெய்தீப் மற்றும் வீராங்கனை சகினா காத்தூன் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments