மத்திய அரசின் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் அறிமுகம்: நான்காண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு

0 1523

தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் 6 லட்சம் கோடி ரூபாயை அடுத்த நான்கு ஆண்டுகளில் திரட்டுவதற்கான திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

ரயில்வே, விமானநிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள் போன்ற உள்கட்டமைப்பு சொத்துகளில் இருந்து நிதி திரட்டுவதற்கான தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த போது அறிவித்தார்.

இதன்படி அதிகமாகப் பயன்படுத்தப்படாத 15 ரயில்வே விளையாட்டரங்கங்கள், 25 விமான நிலையங்கள், 160 நிலக்கரி சுரங்கங்கள் போன்றவை தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட உள்ளன. இவை தவிர சாலைகள், மின் விநியோகக் குழாய்கள், எரிவாயு குழாய்கள் போன்றவையும் நிதியாக்கும் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.

இதன்மூலம் 2025ம் ஆண்டுக்குள் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. மத்திய அரசின் பணமாக்கல் திட்டம் மூலம் நிதியாதாரம் திரட்டப்படும் அதே நேரத்தில், சொத்துக்களின் மீதான உரிமை அரசின் வசமே இருக்கும். நான்கு ஆண்டு முடிவில் குத்தகைக்காரர்களிடம் இருந்து சொத்துக்கள் மீண்டும் அரசிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய திட்டத்தின்மூலம் கிடைக்கும் வருவாய், நாட்டின் பொருளாதாரம், அதன் வளர்ச்சிக்கு வலிமை சேர்க்கும் திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் என நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் கன்ட் தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசின் தேசியப் பணமாக்கல் திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments