அரசு நிறுவனங்களின் பங்குகளையும் சொத்துக்களையும் விற்பதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் 6 இலட்சம் கோடி ரூபாயைத் திரட்ட இலக்கு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 6521
அரசு நிறுவனங்களின் பங்குகளையும் சொத்துக்களையும் விற்பதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் 6 இலட்சம் கோடி ரூபாயைத் திரட்ட இலக்கு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளையும் சொத்துக்களையும் விற்பதன் மூலம் அடுத்த நான்காண்டுகளில் 6 இலட்சம் கோடி ரூபாயைத் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை விற்றுப் பணமாக்கும் திட்டத்தை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுப் பேசினார். அப்போது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம், எண்ணெய் இயற்கை வாயு, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, உணவு, சுரங்கம், நிலக்கரி, வீட்டு வசதி ஆகிய அமைச்சகங்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்தவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments