ஆப்கானில் இருந்து கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் வரை புதிய அரசு அமையாது - தாலிபான்

0 3659
ஆப்கானில் இருந்து கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் வரை புதிய அரசு அமையாது - தாலிபான்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரர் வெளியேறும் வரை அங்குப் புதிய அரசு அமையாது எனத் தாலிபான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31ஆம் நாளுக்குப் பிறகும் நீட்டிக்க முடியாது எனத் தாலிபான்கள் கூறியுள்ளனர்.

காபூலில் இருந்து சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப், மற்றும் 75 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படை விமானம் டெல்லிக்கு வந்து சேர்ந்தது.

காபூல் விமான நிலையத்தில் நீடிக்கும் குழப்பங்கள், சிக்கலால் அந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டிய 500 டன் மருந்துகள், ஊட்டச்சத்து உணவுகள் ஆகியவற்றை அனுப்ப முடியவில்லை என உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் 3 லட்சம் பேருக்கு மருந்துகள் உணவுகள் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களைப் போலவே முன்னாள் அதிபர் அஷ்ரப் கனிக்கும், அம்ருல்லா சலேவுக்கும் பொதுமன்னிப்பு அளிப்பதாகத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments