பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2395

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை நிறுத்தக் கூறி பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத - கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது வருத்தமடைய செய்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அத்தோடு, உயிரிழந்த தினேஷ் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவர், இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் எனக் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments