சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநரை அடித்து துவம்சம் செய்த பொதுமக்கள்

0 4399

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன பெண்ணிடம் அத்துமீறிய வேன் ஓட்டுநரை பொதுமக்கள் செருப்பால் அடித்து துவம்சம் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.

நேற்றிரவு வேன் ஓட்டுநரான செல்வன் என்பவன், பேருந்து நிலைய பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு அருகே சென்று படுத்துக் கொண்டு அத்துமீறியதாக கூறப்படுகிறது.

தூக்கத்தில் அசௌகரியத்தை உணர்ந்த அந்த பெண், எழுந்து கூச்சலிடவே, பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், பொதுமக்கள் அவனை செருப்பால் அடித்தும், சமையல் கரண்டியால் விளாசி எடுத்தும் போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments