இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றி சட்டப்படியே முடிவெடுக்க முடியும் - மத்திய அரசு

0 1731
இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றி சட்டப்படியே முடிவெடுக்க முடியும் - மத்திய அரசு

இலங்கை அகதிகள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றிச் சட்டத்துக்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் உள்ளோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது பற்றி முடிவெடுக்கத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments