2021 -ல் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்கின் பட்டியலில் அஜித்தின் வலிமை படம் முதலிடம்

0 2953

2021-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ் டேக்கில் விஜயின் மாஸ்டரை பின்னுக்கு தள்ளி அஜித்தின் வலிமை படம் முதலிடம் பிடித்துள்ளது.

ஹேஷ்டேக் தினத்தை ஒட்டி, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30-ந் தேதி வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் நடிகர் அஜித்தின் வலிமை படத்திற்காக பயன்படுத்தப்பட்ட #Valimai முதலிடத்தை பிடித்துள்ளது. விஜய்யின் மாஸ்டர் படம் 2ஆம் இடத்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் சர்காருவாரிபட்டா படம் குறித்த ஹேஷ்டேக்குகள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments