சென்னை பூக்கடை பகுதி நகைக் கடையில் தீ விபத்து..!

0 3003

சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் உள்ள பாத்திமா ஜூவல்லர்ஸ் நகை கடையில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. நண்பகல் ஒன்றரை மணிக்கு பிடித்த தீ மளமளவென கடை முழுதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

கடையில் தீ பிடித்ததும் அங்கிருந்த பணியாளர்களும் மற்றவர்களும் உடனடியாக வெளியேறினர். ராயபுரம், வண்ணாரப்பேட்டை, உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்

பாதுகாப்பு கருதி அருகில் இருந்த கடைகளிலும் தீ பரவாமல் தடுக்க கடைகள் மூடப்பட்டு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. முதல் தளத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீவிபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. நகைகள் இருந்த தரை தளம் தவிர்த்து, பொருட்கள் வைக்கப்பட்டிருந்த தளமும் பணியாளர்கள் தங்கி இருந்த இரண்டாம் தளமும் மட்டுமே எரிந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments