ராஜேஷ்குமார் மர்ம நாவலா? சிந்துபாத் கதையா? கொடநாடு வழக்கில் சூடாகும் விவாதம்

0 1607
ராஜேஷ்குமார் மர்ம நாவலா? சிந்துபாத் கதையா? கொடநாடு வழக்கில் சூடாகும் விவாதம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தன்னைவிட ஜூனியர் வழக்கறிஞரான செல்வப்பெருந்தகை, பேரவையில் விதி எண் 55-ன் கீழ் கொடநாடு விவகாரம் குறித்து விவாதிக்கக் கோருவது விதி மீறல் என்றார்.


கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் பூதாகரமாகி உள்ளதால், கவன ஈர்ப்பு தீர்மானம் பேரவை தலைவரிடம் அளிக்கபட்டுள்ளதாக, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்றால் எதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஆளுநரை சந்தித்தார், செய்தியாளர்களிடம் ஏன் இதை பற்றி பேசினார்? எனக் கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை, இந்த விவகாரத்தை விவாதிக்க அதிமுகவினர் அஞ்சுவது ஏன் என்றும் வினவினார்.


இதனிடையே, கொடநாடு விவகாரத்தை சட்டமன்றத்திற்கு முதலில் கொண்டு வந்ததே அதிமுக தான் எனக் கூறியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, பேரவையில் விவாதிக்கக் கூடாது என ஜெயக்குமார் கூறுவது முரண்பாடாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments