காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை... ஆப்கன் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்

0 4960

காபூல் விமான நிலையத்தில் ஆப்கன் வீரர்களுக்கும் அடையாளம் தெரியாத சிலருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், ஆப்கன் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஜெர்மன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை விமான நிலையத்தின் வடக்கு நுழைவாயிலில் இந்த சம்பவம் நடந்த தாகவும், ஆப்கன் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 3 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் ஜெர்மன் ராணுவம் தெரிவித்துள்ளது. சண்டை நடக்கும் போது ஜெர்மன் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள்  சேர்ந்து ஆப்கன் வீரர்களுக்கு ஆதரவாக சண்டையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றினாலும், காபூல் விமான நிலையம், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாட்டுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments