தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 3530

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளைய தினம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments