தமிழகம் முழுவதும் 55 அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2093

தமிழகம் முழுவதும் 55 அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் இந்த திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அத்தோடு, இன்போசிஸ் நிறுவனம் வழங்கிய ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோவாக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி பலருக்கும் கிடைக்காத நிலை உள்ளதாகவும் தமிழகத்தில் 4 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிக்கு உடனடி தேவை இருப்பதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments