கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

0 3212

கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா முதல் அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கடந்த பிப்ரவரியில் திறக்கப்பட்ட பள்ளிகள் 2-வது அலை தொடங்கியதை அடுத்து மீண்டும் மூடப்பட்டன. இந்த நிலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்து, உடல் வெப்பம் அளந்த பிறகு பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் முக கவசம் அணிந்து வகுப்புகளில் ஆஜராகினர்.
Breath
50 சதவீத மாணவர்கள் அனுமதித்து சுழற்சி முறையில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் 2 மாணவர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், பள்ளிகளை மூடி கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments