ம.பி., உ.பி.,யில் இரு வெவ்வேறு சம்பவங்களில் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி..!

0 1863

மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் இரு வெவ்வேறு சம்பவங்களில் பலூனுக்குக் காற்றடைப்பதற்கான சிலிண்டர்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா சந்தையில் பலூன் விற்றவர் பலூன்களுக்குக் காற்றடைத்தபோது சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்ததாகவும் இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ராம்நகரில் சிலிண்டர் வெடித்ததில் இருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments