ஆப்கனில் அடி பணியாத பஞ்ஷிர் மாகாணத்தை நோக்கி படையெடுக்கும் தாலிபன்கள்..!

0 4501

ஆப்கனின் பஞ்ஷிர் மாகாணத்தில் அதிகாரத்தை தாலிபன்களிடம் ஒப்படைக்க அங்குள்ள அதிகாரிகள் மறுப்பதை தொடர்ந்து போரிட்டு அதை கைப்பற்றும் நோக்கில் நூற்றுக்கணக்கான தாலிபன்கள் புறப்பட்டுள்ளனர்.

34 மாகாணங்களை கொண்ட ஆப்கனில் 33 மாகாணங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. ஆனால் காபூலுக்கு வடகிழக்கில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மட்டும் இது வரை அவர்களின் கட்டுப்பாட்டில் வரவில்லை.

இதை அடுத்து ராணுவ டிரக்குகளில் தாலிபன்களின் கொடியுடன் நூற்றுக்கணக்கானோர் அந்த பள்ளத்தாக்கை நோக்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே பஞ்ஷிர் பள்ளத்தாக்கை கையில் வைத்துள்ள முன்னாள் சோவியத் எதிர்ப்பு தலைவரான அகமது ஷா மசூதின் மகனான மசூத், தாலிபன்களுடன் போரிட தாங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments