அமலுக்கு வந்த கூடுதல் தளர்வுகள்: சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்கள் திறப்பு.!

0 2135

தமிழகத்தில் ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும்  திறக்கப்பட்டுள்ளன. கடற்கரைக்கு  செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் சில இடங்களில் இயங்கி வருகின்றன. திரையரங்கு ஊழியர்கள் தடுப்பூசி கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அதேபோல அனைத்து வகை பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், படகு இல்லங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளிலுள்ள பார்கள் போன்றவையும் திறக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்களுக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் இன்று முதல் இரவு 10 மணி வரை செயல்படும். கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்கும் முழு அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதனால் காலையிலேயே பொதுமக்கள் மெரினாவுக்குச் சென்று உடற்பயிற்சி செய்தும், கடற்கரை மணலில் கால் பதித்தும் மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments