கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய ரயில்வேக்கு சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு - மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே

0 2649

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய ரயில்வேக்கு சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள ஜல்னா என்ற இடத்தில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அவர், பயணிகள் ரயில் பிரிவு எப்போதும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது என்றார். டிக்கெட் கட்டணத்தை அதிகரிப்பது பயணிகளை பாதிக்கும் என்பதால், தங்களால் அவ்வாறு செய்ய முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சரக்கு ரயில்கள் மட்டுமே வருவாயை உருவாக்குகின்றன என்று குறிப்பிட்ட அவர், தொற்றுநோய் பரவலின் போது, சரக்கு ரயில்கள் பொருட்களை எடுத்துச் செல்வதிலும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தன என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments