சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் இரவு 11 மணிவரை நீட்டிப்பு

0 1958

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல்  வார நாட்களில் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.

ஏற்கனவே இரவு 10 மணிவரை ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக இன்று முதல் காலை ஐந்தரை மணியில் இருந்து இரவு 11 மணி வரை சேவை நீட்டிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் எனவும், விதிகளை மீறினால் 200ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments