அல் கொய்தா அமைப்பிற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - தாலிபான்கள்

0 2264

அல் கொய்தா அமைப்பிற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தாலிபான் அமைப்பினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஹமீர் கர்சாய் விமான நிலையத்தில் இருந்து இந்தியர்கள் உள்பட யாரையும் தாங்கள் கடத்தவில்லை என்று தெரிவித்தார். மேலும் அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் தங்களுடன் இல்லை என்று குறிப்பிட்ட நயீம், அல் கொய்தா அமைப்பினருடன் எந்த உறவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, சில மாகாண அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை ஒப்படைக்க மறுப்பதால் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி நூற்றுக்கணக்கான தாலிபான்கள் படையெடுத்துச் செல்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments