கர்நாடகா : 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு

0 2587

கர்நாடகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. 

பள்ளிகளை திறப்பதற்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்துள்ளதாக, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால்  மாணவர்கள் தைரியமாக பள்ளிக்கு வருமாறு, முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர், பெற்றோரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments