கர்நாடகத்தில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு - கர்நாடக அரசு

0 5801
கர்நாடகத்தில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு - கர்நாடக அரசு

கர்நாடகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை திங்கட்கிழமை முதல் பள்ளிக்கூடங்களும், கலை அறிவியல் உள்ளிட்ட கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பள்ளிகளை திறப்பதற்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்துள்ளது என்றார். கொரோனா விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் தைரியமாக பள்ளிக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறிய அவர், பெற்றோரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments