4 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதற்காகக் கார் பரிசு

0 2510
சென்னையில் , 4 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதற்காகக் கார் பரிசு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் பாஜக வெற்றிபெறக் காரணமாக இருந்த மாவட்டத் தலைவர்களுக்கு அந்தக் கட்சியின் சார்பில் கார்கள் பரிசளிக்கப்பட்டன.

சென்னை தியாகராய நகரில் பாஜக மாநில அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, கோவை மாவட்ட பாஜக தலைவர்களுக்கு ஆளுக்கொரு இன்னோவா காரை மத்திய அமைச்சர் முருகன் வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments