மதுரையில் நடைப்பயிற்சி சென்ற ஊராட்சி துணை தலைவர் சாலை விபத்தில் பலி

0 2786
மதுரையில் நடைப்பயிற்சி சென்ற ஊராட்சி துணை தலைவர் சாலை விபத்தில் பலி

மதுரையில் நடைபயிற்சி மேற்கொண்ட அதிமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துவரிமான் ஊராட்சி மன்ற துணை தலைவரான லட்சுமணன் அதிகாலையில் வழக்கம் போல் கம்மாக்கரை சாலையில் நடைப்பயிற்சி சென்றபோது, அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

அதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வழியிலேயே லட்சுமணன் உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், லட்சுமணன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments