சென்னை அரும்பாக்கத்தில் ஆண் போல வேடமிட்டு நண்பர்களுடன் தங்கியிருந்த சிறுமி

0 2567
சென்னை அரும்பாக்கத்தில் ஆண் போல வேடமிட்டு நண்பர்களுடன் தங்கியிருந்த சிறுமி

சென்னை அரும்பாக்கத்தில் 3 ஆண் நண்பர்களோடு பள்ளிவளாகத்தில் நிறுத்தியிருந்த பேருந்தில் தங்கியிருந்த 16 வயது ஆண் வேடமிட்ட சிறுமி மீட்கப்பட்டு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் இந்த சிறுமி ஆண் போல முடி வெட்டிக்கொண்டும், ஆடை உடுத்திக் கொண்டும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சியை சேர்ந்த அந்த 16 வயது சிறுமி சென்னை ஜாம்பஜார் மீர்சாகிப்பேட்டையில் சாலையோரம் வசிப்பவர் என்பதும், கஞ்சாபோதைக்கு அடிமையாகி குற்ற வழக்குகளில் தொடர்புடைய தனது நண்பர்களான கார்த்திக், நிஜாம் மற்றும் தேவா ஆகியோரோடு இரவில் ஊர் சுற்றி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments