பூந்தமல்லியில் தெரு நாய் கடித்ததில் ரேபீஸ் நோய் ஏற்பட்டு 7 வயது சிறுவன் உயிரிழப்பு

0 2253
பூந்தமல்லியில் தெரு நாய் கடித்ததில் ரேபீஸ் நோய் ஏற்பட்டு 7 வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை அடுத்த பூந்தமல்லியில் தெரு நாய் கடித்ததில் ரேபீஸ் நோய் ஏற்பட்டு 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அகரமேல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகன் மோனீஷை ஒரு மாதத்திற்கு முன் தெரு நாய் ஒன்று கடித்ததாக கூறப்படும் நிலையில், அஜாக்கிரதையாக இருந்த பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நாய் கடித்த சிறுவனுக்கு முறையான சிகிச்சை ஏதும் அளிக்கப்படாத சூழலில் திடீரென சிறுவனின் நாக்கில் அதிகமாக உமிழ்நீர் ஊற்றியதால், அச்சமடைந்த பெற்றோர் சிறுவனை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு மோனீஷுக்கு ரேபிஸ் நோய் ஏற்பட்டது கண்டறியப்பட்ட நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதனையடுத்து, ரேபீஸ் நோய் பரவுவதை தடுக்கும் விதமாக சிறுவன் உடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து ரேபீஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments