வருமான வரி இ-ஃபைலிங் தளத்தில் தொடர்ந்து குளறுபடிகள் ; நேரில் விளக்கம் அளிக்க இன்ஃபோசிஸ் சிஇஓ வுக்கு அரசு உத்தரவு

0 2676
வருமான வரி இ-ஃபைலிங் தளத்தில் தொடர்ந்து குளறுபடிகள்

 வருமான வரி தாக்கலுக்கான புதிய இ-ஃபைலிங் தளத்தில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பது ஏன்? என நாளை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு இன்போசிஸ் சிஇஓ சலீல் பரேக்கிற்கு மத்திய நிதி அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூன் 7 ஆம் தேதி முதல் இயங்கத் துவங்கிய இந்த இணையதளத்தை இன்போசிஸ் வடிவமைத்துள்ளது. ஆனால் அப்போது முதலே பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு அவற்றை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட்டுகளாக எடுத்து நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கவலை தெரிவித்துள்ள நிலையில், கோளாறுகளை சரி செய்யுமாறு இன்போசிஸ் சிஇஓ பரேக் மற்றும் மூத்த அதிகாரி பிரவீண் ராவிடம் அறிவுறுத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments