ஆப்கான் அகதிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம்

0 2164
ஆப்கான் அகதிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம்

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய கர்ப்பிணி பெண்ணிற்கு அமெரிக்க விமானத்தில் குழந்தை பிறந்தது.

தாலிபான்களுக்கு அஞ்சி அமெரிக்க விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறிய கர்ப்பிணிக்கு நடுவானில் பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால், விமானத்தில் நிலவும் காற்றழுத்தத்தை குறைப்பதற்காக விமானத்தை பைலட் தாழ்வாகப் பறக்கச் செய்தார்.

ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப் படை தளத்தில் விமானம் தரை இறக்கப்பட்ட சில வினாடிகளில் கர்ப்பிணி பெண்ணிற்கு அழகான குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments