இணையத்தில் உள்ள ஆபாச வீடியோக்களை 24 மணி நேரத்தில் அகற்றலாம்: சைபர் கிரைம் போலீசார்

0 4410
இணையத்தில் உள்ள ஆபாச வீடியோக்களை 24 மணி நேரத்தில் அகற்றலாம்: சைபர் கிரைம் போலீசார்

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் ஆபாச வீடியோக்களை 24 மணி நேரத்தில் அகற்றி விடலாம் என்பதால் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் பெண்கள் தைரியமாக புகாரளிக்க முன்வருமாறு கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டப்படுவதால் பல இன்னல்களுக்கு ஆளாவதுடன் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குத் தள்ளப்படுகின்றனர்.

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் ஆபாச வீடியோக்களை 24 மணி நேரத்தில் அகற்றிவிடலாம் என்பது தெரியாமல் பலர் உள்ளதாகத் தெரிவித்த சைபர் கிரைம் ஆய்வாளர் நிர்மலா பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வராமல் eservices.tnpolice.gov.in இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கலாம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments