உளுந்தூர்பேட்டை அருகே பின்பக்க டயர் வெடித்ததில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

0 1774
உளுந்தூர்பேட்டை அருகே பின்பக்க டயர் வெடித்ததில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குளிர்பானங்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்பானங்களை லோடு ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது, பின்பக்க டயர் வெடித்து கவிழ்ந்தது.

அதில், மினி லாரியில் இருந்தவர்கள் உயிர்த்தப்பிய நிலையில், குளிர்பான பாட்டில்கள் சாலையில் சிதறின. இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments