ரக்சா பந்தன் நாளில் முதலமைச்சர்களுக்கு ராக்கி கட்டிவிட்ட பொதுமக்கள்

0 1892
ரக்சா பந்தன் நாளில் முதலமைச்சர்களுக்கு ராக்கி கட்டிவிட்ட பொதுமக்கள்

ரக்சா பந்தன் விழாவையொட்டிப் பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்குப் பொதுமக்கள் ராக்கி கயிறு கட்டிச் சகோதர அன்பை வெளிப்படுத்தினர்.

உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்குப் பெண்களும் சிறுமியரும் ராக்கி கட்டி விட்டனர். பீகாரில் ரக்சா பந்தன், மரங்களைக் காக்கும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி மரத்துக்கு ராக்கி கட்டிவிட்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், நாம் மரங்களைக் காத்தால் அவை மக்களைக் காக்கும் எனத் தெரிவித்தார்.

அசாம் முதலமைச்சர் ஹிமான்ட்டா பிஸ்வா சர்மா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கும் பெண்கள் ராக்கி கட்டிவிட்டு வாழ்த்துப் பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments