நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகன ஓட்டிகளை துரத்தியதால் பரபரப்பு

0 2164
நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகன ஓட்டிகளை துரத்தியதால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை திடீரென வாகன ஓட்டிகளை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டுப்பகுதியில் இருந்து சாலையில் உலா வந்த காட்டு யானை சாலையில் இரு புறங்களிலும் வனப்பகுதிக்கு செல்ல வழி இல்லாததால் நீண்ட நேரம் சாலையிலேயே இலைகளை சாப்பிட்டவாறு நின்றது.

இந்த நிலையில் நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள் யானையை தங்களது செல்போன்களில் வீடியோ எடுக்க முயன்றதோடு, கத்தி கூச்சல் போட்டனர். இதனால் ஆவேசமடைந்த யானை அவர்களை சிறிது தூரம் துரத்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments