35 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் விலை குறைந்தது ; பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 முதல் 20 காசுகள் வரை குறைப்பு

0 2707
35 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் விலை குறைந்தது

35 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 முதல் 20 காசுகள் வரை குறைந்துள்ளது. டீசல் விலையும் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு 18 முதல் 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விலை குறைப்பை அடுத்து, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 99 ரூபாய் 32 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 93 ரூபாய் 66 காசுகளாகவும் விற்பனையாகிறது. கடந்த மே மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த மாதம் 17 ஆம் தேதி வரை பெட்ரோல் விலையில் 11 ரூபாய் 44 காசுகளும், டீசல் விலையில் 9 ரூபாய் 14 காசுகளும் உயர்த்தப்பட்டன. அதன் காரணமாக நாடு முழுதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிய நிலையில், 3 மாநிலங்களில் டீசல் விலையும் சதமடித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments