சட்டவிரோத மது விற்பனையை மறைக்க லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்

0 2035
சட்டவிரோத மது விற்பனையை மறைக்க லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில், எழும்பூர் நுண்ணறிவு பிரிவு காவலர் குமுதநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் நபர்கள் குறித்து நுண்ணறிவு பிரிவு காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

இந்த நிலையில் எழும்பூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு காவலர் குமுதநாதன், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த சண்முகம் என்பவரிடம் வாரம்வாரம் ஐநூறு ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர் பற்றிய தகவல்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலானதை அடுத்து விசாரணை நடத்திய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், குமுதநாதனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments