காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானியர் 7 பேர் பலி

0 2691
காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானியர் 7 பேர் பலி

காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் குழப்பமான சூழலில் சிக்கி ஆப்கானை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் காபூலை கைப்பற்றி ஒரு வாரம் ஆகும் நிலையில் அங்கிருந்து எப்படியாவது தப்பி வெளிநாடுகளுக்கு சென்று விட வேண்டும் என பதைபதைப்பில் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தை முற்றுகை இட்டுள்ளனர்.

இதனால் அங்கு கள நிலவரம் மிகவும் சவாலான ஒன்றாக இருப்பதாக  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள பிரிட்டிஷ் ராணுவம், எனினும் அங்கு நிலைமையை பாதுகாப்பாகவும், பத்திரமானதாகவும் மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலைய உள்பகுதிகள் பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments