மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிப்பு

0 3952

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். இதையடுத்துக் காலியாக உள்ள அந்த இடத்துக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 13ஆம் நாள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு ஆகஸ்டு 24 முதல் 31 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments