தரமற்ற கட்டிடங்களுக்கு, கோவிட் மையம் அமைக்கப்பட்டதை காரணம் காட்டுவதா? சுவர்களிலா ஊசி போட்டார்கள்? - அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

0 3343

சென்னையில் 80வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாகனங்கள் மூலம் வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சென்னையில் 80வயதிற்கு மேற்பட்டவர்கள், மொத்தமாக ஒரு லட்சத்து 60ஆயிரம் பேர் இருக்கும் நிலையில், அதில் 90 ஆயிரம் பேர் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடப்படவுள்ளது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேருவிடம், கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை சென்னை மாநகராட்சி கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்திய போது தான் சேதாரம் ஏற்பட்டதாக ஒப்பந்ததாரர் கூறியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், சுவர்களிலா ஊசி போட்டார்கள்? என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments