தமிழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர நாளை முதல் செப்.1 வரை விண்ணப்பிக்கலாம்

0 3320

தமிழகத்திலுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tngasapg.in/ மற்றும் https://www.tngasapg.in/ ஆகிய இணையதளத்தில் நாளை முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள்  மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் 60 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை, மாறாக அவர்கள் பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments