ஆந்திராவில் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை தேனிலவு விடுதியாக வாடகைக்கு விட்ட அதிர்ச்சி சம்பவம்

0 3560

ஆந்திராவில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை அதிகாரிகள் வாடகைக்கு விட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

காக்கிநாடாவில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் உள்ள அறைகளில் சிலவற்றை பேராசிரியர் ஒருவரின் சிபாரிசின் பேரில், கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக பல்கலைக்கழக அதிகாரிகள் வாடகைக்கு விட்டுள்ளனர்.

இந்தநிலையில் இருபதாம் தேதி அங்கு சென்று பார்த்தவர்கள்,  அறை அலங்கரிக்கப்பட்டிருந்த விதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, முதலிரவுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.  பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்ட போது, இதுகுறித்து ஐந்து பேர் கொண்ட சிறப்பு கமிட்டி  விசாரித்து வருவதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments