அரசுப் பேருந்துக்குள் குடை பிடித்தபடி சென்ற பயணிகள்..!

0 3230

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசுப் பேருந்துக்குள் மழை நீர் ஊற்றியதால் பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது.

வத்தலக்குண்டில் இருந்து கொடைக்கானல் பூலத்தூர் கிராமம் சென்ற அரசுப்பேருந்தின் மேற்கூரையில் இருந்த ஓட்டைகள் வழியாகப் பேருந்துக்குள் மழைநீர் கொட்டத் தொடங்கியது. பயணிகள் பேருந்துக்குள்ளேயே குடை பிடித்தபடி செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின.

பேருந்தின் மேற்கூரையை உடனடியாக சீரமைப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments