பட்டாக்கத்தியுடன் சினிமா பாடலுக்கு நடனமாடிய கார் ஓட்டுநர் : வீடியோ வைரலானதால் கைது

0 2434

நெல்லை பாளையங்கோட்டையில் பட்டாக்கத்தியுடன் சினிமா பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநரான மணிகண்டன் என்ற அந்த நபர், சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு, சுமார் 3 அடி நீளமுள்ள பட்டாக்கத்தியுடன் சினிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ காட்சி வைரலானது.

இந்த வீடியோ காட்சிகள் போலீசாரின் கவனத்துச் சென்ற நிலையில், மணிகண்டனை அவர்கள் கைது செய்தனர். பட்டாக்கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை மிரட்டல், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments