ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாடு அதிகரிப்பு - திடீர் ஆய்வு செய்து அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

0 2449

சென்னையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாட்டை தடுக்க திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கின் போது பார்சலுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட கடைகளில், நெகிழிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, சென்னையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியை உபயோகிக்கும் பெரு நிறுவனங்கள், வணிக கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்குமாறு, மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments